தஞ்சாவூரில் இன்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளின் சந்திப்பு நிகழ்ச்சி, பெரும் அரசியல் திருப்பமாக அமைந்தது. ஏற்கனவே மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனின் ‘எம்ஜிஆர் அதிமுக’ விஜய்க்குத் தனது ஆதரவை அறிவித்திருந்த நிலையில், தற்போது ‘அனைத்து மக்கள் நீதி கட்சி’ தவெக கூட்டணியில் 2-வது கட்சியாக அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது.
இன்று தஞ்சையில் நடைபெற்ற தவெக நிர்வாகிகளின் முக்கியச் சந்திப்பிற்கு, தனது தொண்டர்களுடன் திரண்டு வந்த ‘அனைத்து மக்கள் நீதி கட்சி’யின் தலைவர் சுரேஷ், வரும் தேர்தலில் தவெக-வுடன் கூட்டணி அமைத்துப் பணியாற்றப் போவதாக அதிரடியாக அறிவித்தார். விஜய்யின் அரசியல் வருகையை வரவேற்றுள்ள அவர், தமிழகத்தில் மாற்றத்தைக் கொண்டு வர தவெக-வுடன் இணைந்து செயல்படப் போவதாகத் தெரிவித்தார். தஞ்சை மண்ணில் உருவான இந்த புதிய கூட்டணி, தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
