சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான புதிய ஆவணங்களை அமெரிக்க நீதித்துறை வெளியிட்டுள்ளது. அதில், சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு நியூ ஜெர்சியில் 13 முதல் 14 வயதுடைய சிறுமி ஒருவரை டொனால்ட் டிரம்ப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்த முயன்றதாக ஒரு திடுக்கிடும் தகவல் இடம்பெற்றுள்ளது.
அந்தச் சிறுமி தன்னைத் தற்காத்துக் கொள்ளும் முயற்சியில் டிரம்பின் அந்தரங்க உறுப்பைக் கடித்ததாகவும், அதன் பின்னர் அந்தச் சிறுமி அங்கிருந்தவர்களால் தாக்கப்பட்டதாகவும் மற்றொரு சிறுமி எப்.பி.ஐ அமைப்பிடம் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். இந்த ஆவணங்கள் ஆன்லைனில் வெளியான சில நிமிடங்களிலேயே மாயமாகி, பின்னர் ‘சர்வர்’ கோளாறு காரணமாகத் தெரியவில்லை என்ற விளக்கத்துடன் மீண்டும் பதிவேற்றப்பட்டது பெரும் சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
இருப்பினும், இந்தத் தகவல்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது சாட்சிகள் அளித்த வாக்குமூலங்கள் மட்டுமே என்பதால், இவை இன்னும் முழுமையாக உறுதிப்படுத்தப்படவில்லை. அமெரிக்க நீதித்துறை இது குறித்து விளக்கம் அளிக்கையில், இந்த ஆவணங்களில் இடம்பெற்றுள்ள சில கூற்றுக்கள் ஆதாரமற்றவை என்றும், ஒருவேளை இதில் உண்மை இருந்திருந்தால் அப்போதே சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
டிரம்ப் தரப்பில் இருந்தும் இந்தப் புகார்களுக்கு இதுவரை முறையான பதில்கள் எதுவும் வரவில்லை. இருந்தாலும், உலகப் பணக்காரர் எலான் மஸ்க் உள்ளிட்ட உயர்மட்ட நபர்கள் கலந்து கொண்ட விருந்துகளில் எப்ஸ்டீனுக்கும் டிரம்புக்கும் இருந்த நெருக்கம் குறித்த இந்தப் புதிய ஆவணங்கள் அமெரிக்க அரசியலில் ஒரு பெரிய பூகம்பத்தையே ஏற்படுத்தியுள்ளது.
