ஏர் ஏசியா விமானம் ஒன்று புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, ரஷ்ய மொழி பேசும் பயணி ஒருவர் திடீரென தனது ஆடைகளைக் களைந்துவிட்டு வெறும் உள்ளாடையுடன் கேபினுக்குள் உலவத் தொடங்கினார். இருக்கைகளின் மீது ஏறி நின்றும், சக பயணிகளையும் விமானப் பணியாளர்களையும் மிரட்டியும் அவர் செய்த ரகளை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. “என்னை யாரும் தொடாதீங்க” என்று கத்திய அந்த நபர், “நாம் அனைவரும் சாக வேண்டுமா?” என்று கேட்டுக்கொண்டே விமானத்தின் கதவைத் திறக்கச் சொல்லி அடம் பிடித்துள்ளார். இதனால் மற்ற பயணிகள் அச்சத்தில் உறைந்து போக, நிலைமை கைமீறிச் சென்றதால் விமானம் அவசரமாகத் தரைஇறக்கப்பட்டது.

​விமானம் தரைஇறங்கிய பிறகும் அந்த நபரின் சேட்டை குறையவில்லை; படிக்கட்டுகள் கொண்டு வருவதற்கு முன்பே அவசரமாக விமானத்திலிருந்து கீழே குதித்து தப்பிக்க முயன்றார். இதில் அவருக்குக் காலில் காயம் ஏற்பட்ட நிலையில், அங்கிருந்த போலீஸார் அவரை மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர். விமானப் பாதுகாப்புக்கே அச்சுறுத்தல் கொடுத்த அந்தப் பயணிக்குக் கடுமையான அபராதமோ அல்லது சிறைத் தண்டனையோ கிடைக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. நடுவானில் இப்படி ஒரு விசித்திரமான மற்றும் பயங்கரமான சம்பவத்தை எதிர்கொண்ட பயணிகள், இன்னமும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை.