மும்பையில் உள்ள கோராய் கடற்கரையை நோக்கி பயணிகளுடன் ஒரு மினி வேன் சென்று கொண்டிருந்தது. கடலில் அலை அதிகமாக இருந்ததால், பாதுகாப்பு அதிகாரிகள் குறிப்பிட்ட இடத்திற்கு மேல் வாகனங்களை அனுமதிக்கக் கூடாது என அறிவுறுத்தியிருந்தனர். ஆனால், வேன் ஓட்டுநர் இந்த அறிவுரையை மீறி கடற்கரை வரை வாகனத்தை இயக்கியுள்ளார். இந்த நிலையில், திடீரென கடலில் இருந்து வந்த பெரிய அலை வேனை இழுத்துச் சென்றது.

இதனால் பயணிகளுக்கு ஆபத்து ஏற்பட்ட நிலையில் அதிர்ஷ்டவசமாக, வேனில் இருந்த பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். பாதுகாப்பு விதிகளை மீறி வாகனத்தை கடற்கரை வரை கொண்டு சென்றதற்காக, வேன் ஓட்டுநர் மற்றும் உரிமையாளர் மீது காவல்துறையினர் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர். தற்போது இந்த சம்பவம் குறித்து காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த நிகழ்வு, பாதுகாப்பு அறிவுரைகளை பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது