தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜயை அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக கோவையில் ஒரு நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்ட போது பேசியதாவது, நடிகர் விஜயின் படம் ரிலீஸ் ஆவதற்கு நான்தான் உதவி செய்தேன். அப்போது விஜய் என்னுடைய வீட்டில் இருந்த நிலையில் நான் தான் அவரை என்னுடைய காரில் அழைத்து சென்று எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்திக்க வைத்து படத்தை ரிலீஸ் செய்ய உதவினேன்.
கரூரில் 41 பேர் உயிரிழந்த நிலையில் அதனை விஜய் கண்டுகொள்ளவே இல்லை. அவர் கண்டுகொள்ளாமல் சென்றதோடு மீண்டும் அவர் திரும்பி வரவே இல்லை. அதிமுகவில் இருந்து பிரிந்து தமிழக வெற்றிக்கழகத்திற்கு சென்றவர்கள் தற்போது அங்கு கஷ்டப்படுகிறார்கள். அவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கப் படவில்லை. இதனால் அதே பதவியும் அதே மரியாதையும் மீண்டும் கிடைத்தால் அதிமுகவுக்கு வர தயாராக இருப்பதாக எஸ்பி வேலுமணி கூறினார்.
மேலும் அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உட்பட பல முக்கிய நிர்வாகிகள் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்த நிலையில் அவர்கள் மீண்டும் அதிமுகவுக்கே வர விரும்புவதாக எஸ்பி வேலுமணி சூசகமாக தெரிவித்தது தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
