மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில், ஓய்வு பெற்ற நீதிபதியின் மருமகளும் முன்னாள் நடிகையுமான ட்விஷா சர்மா தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தற்போது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ட்விஷா தனது தாயுடன் கடைசியாகப் பேசிய வாட்ஸ்அப் உரையாடல்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதில், தனது கணவர் சமர்த் சர்மா, தன் நடத்தை மீது சந்தேகப்பட்டு “உன் வயிற்றில் வளர்வது யாருடைய குழந்தை?” என்று கேட்டதாகக் கூறி ட்விஷா கதறியுள்ளார்.
மேலும், தனது மாமியார் வீட்டார் மிகவும் கொடூரமானவர்கள் என்றும், தன்னை வாழவிடமாட்டார்கள் என்றும், இங்கிருந்து எப்படியாவது அழைத்துச் செல்லுமாறும் தனது தாயிடம் அவர் கெஞ்சியுள்ளார்.
முன்னதாக, ட்விஷா போதைக்கு அடிமையானவர் என அவரது மாமியார் நீதிமன்றத்தில் வாதிட்ட நிலையில், இந்த வாட்ஸ்அப் ஆதாரங்கள் வழக்கிற்குப் புதிய திருப்பத்தைக் கொடுத்துள்ளன.
