இந்தியாவின் அக்னி-5 (Agni-5) ஏவுகணை சோதனையின் தாக்கம் முடிவதற்குள்ளேயே, வங்கக்கடலில் அடுத்த ஒரு ஏவுகணை சோதனைக்காக இந்தியா ‘நோட்டம்’ (NOTAM) அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சுமார் 1,000 கிலோமீட்டர் தூரம் வரை பாய்ந்து சென்று தாக்கும் வல்லமை கொண்ட இந்த ஏவுகணை சோதனை, வரும் மே 21-22 தேதிகளில் நடக்கவுள்ளது.

இந்தியாவின் இந்த அதிரடி ஆக்ஷனைப் பார்த்து அண்டை நாடான பாகிஸ்தான் கடும் கதிகலங்கிப் போயுள்ளது. இதுகுறித்து எச்சரிக்கை விடுத்துள்ள பாகிஸ்தான் பாதுகாப்பு ஆய்வு மையம் (CISS), இந்தியாவின் இந்த தொடர் ஏவுகணை சோதனைகள் பிராந்திய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்றும், தெற்காசியாவில் ராணுவ ரீதியிலான போட்டியை இது அதிகப்படுத்தும் என்றும் கவலை தெரிவித்துள்ளது.

ஏற்கனவே இந்தியாவின் பிரம்மாஸ் மற்றும் கே-4 ரக ஏவுகணைகளைக் கண்டு மிரண்டுள்ள பாகிஸ்தான், தற்போது இந்தியாவின் இந்த அடுத்தடுத்த ‘மூவ்’களால் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.