பொதுவாகத் தேர்வுகளில் வெற்றி பெற்றாலோ அல்லது ஏதேனும் ஒரு சாதனையைச் செய்தாலோ இனிப்புகள் வழங்கி கொண்டாடுவதுதான் வழக்கம். ஆனால், வடகிழக்கு இந்தியாவைச் சேர்ந்த ஒரு மாணவி, தனது வெற்றியை முற்றிலும் வித்தியாசமான முறையில் கொண்டாடி சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறார். வைரலாகி வரும் அந்த வீடியோவில், தேர்வில் தேர்ச்சி பெற்ற மகிழ்ச்சியில் இருக்கும் அந்த மாணவி, தனது நண்பர்களுக்கும் அக்கம் பக்கத்தினருக்கும் இனிப்புகளுக்குப் பதிலாக ‘ஹாஜ்மோலா’ (Hajmola) எனப்படும் செரிமான மிட்டாய்களை வழங்குகிறார்.

 

 

View this post on Instagram

 

A post shared by 𝕬𝖓𝖎𝖆 𝖓𝖆𝖞𝖆𝖒 𝖗𝖔𝖈𝖐𝖘𝖙𝖆𝖗😎 she/her (@nayam.ania)

இதனைப் பார்த்த பெண் ஒருவர், “ஏன் இவ்வளவு வினோதமான முறையில் Treat வழங்குகிறாய்?” என்று வேடிக்கையாகக் கேட்டார். அதற்கு அந்த மாணவி மிகுந்த தன்னம்பிக்கையுடன், “அது என் இஷ்டம்.. இது என் வாழ்க்கை” என்று மழுப்பாமல் நச்சென்று பதிலளித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பதிவேற்றப்பட்ட சில நாட்களிலேயே லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று வைரலாகியுள்ளது. இதனைப் பார்த்த நெட்டிசன்கள் தங்களது பாணியில் நகைச்சுவையான கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

ஒரு பயனர், “தனது வெற்றியைக் கண்டு பொறாமைப்படுபவர்கள், அந்த வெற்றியைச் செரித்துக் கொள்வதற்காகவே அவர் ஹாஜ்மோலா வழங்குகிறார் போல!” என்று கிண்டலாகக் பதிவிட்டுள்ளார். மற்றொருவர், “கொண்டாட்டத்திற்குப் பெரிய திட்டமிடல் தேவையில்லை, சிறிய யோசனையே போதும் என்பதற்கு இதுவே சாட்சி” எனக் பாராட்டியுள்ளார். மேலும் எது எப்படியோ, “வாழ்க்கையை நமக்குப் பிடித்தவாறு வாழ வேண்டும்” என்ற எளிய செய்தியை இந்த மாணவியின் ‘ஹாஜ்மோலா’ கொண்டாட்டம் உரக்கச் சொல்லியுள்ளது.