பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படம் உருவாகி உள்ளது. இந்த படத்தில் நடிகைகள் ரகுல் பிரீத் சிங், காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர் மற்றும் நடிகர் சித்தார்த் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய உலக நாயகன் கமல்ஹாசனிடம் தொகுப்பாளர் இந்தியன் தாத்தாவாக ரசிகர்களுக்கு சொல்ல வருவது என்ன என்று கேட்டார். அதற்கு கமல்ஹாசன் என்னுடைய மகள் மனசு வச்சா இப்பவே நான் தாத்தா தான் என்று கூறினார். அதாவது நடிகர் கமல்ஹாசன் மகள் சுருதிஹாசனின் திருமணம் குறித்து பேசினார். மேலும் கமல்ஹாசன் சொன்னதை கேட்ட சுருதிஹாசன் வேண்டவே வேண்டாம் என்பது போல் கீழே இருந்து தலையை அசைத்துக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்