அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் 16 ஆண்டுகளுக்கு முன்பு தனது 19 வயது மகளைக் கொன்ற காதலனை, அவளது தாயார் பெருந்தன்மையுடன் மன்னித்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேட் கிராஸ்மேர் என்பவரின் மகள் ஆன், தனது காதலன் கோனர் மெக்பிரைடுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, அவனால் சுடப்பட்டு உயிரிழந்தார்.

தனது கண் முன்னே மகளைப் பறி கொடுத்த கேட், கோபப்படுவதற்குப் பதிலாக, சிறையிலிருந்த கோனரை நேரில் சந்தித்து, “நாங்கள் உன்னை மன்னிக்கிறோம்” என்று கூறி அவனது தண்டனையைக் குறைக்க உதவினார்.

பழிவாங்கும் உணர்ச்சி நம்மைச் சிறைப்படுத்திவிடும் என்றும், மன்னிப்பு மட்டுமே மன அமைதியைத் தரும் என்றும் கூறும் கேட், தற்போது தனது மகளுக்காக ஒரு உருக்கமான கடிதத்தை எழுதியுள்ளார்.

ஆயுள் தண்டனை பெறுவதற்குப் பதிலாக, குற்றத்தை ஒப்புக்கொண்ட கோனர் தற்போது 20 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.

மகளின் மரணத்திற்குப் பிறகும், கொலையாளியுடன் தொடர்பில் இருந்து வரும் இந்தத் தம்பதி, மன்னிப்பு என்பது குற்றத்தை ஏற்பது அல்ல, அது நம் மன காயத்தை ஆற்றும் மருந்து என்று உலகிற்கு உணர்த்தியுள்ளனர்.