மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள லோனி கல்போர் பகுதியில், தன் மகளைத் தொடர்ந்து தொல்லை செய்து வந்த ஒரு இளைஞனை அந்தப் பெண்ணின் தந்தை நடுரோட்டில் வைத்துப் பிரித்தெடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எம்ஐடி (MIT) கல்லூரியில் படிக்கும் அந்த மாணவியை, கடந்த 15 நாட்களாக டி.ஒய் பாட்டீல் கல்லூரியைச் சேர்ந்த ஒரு மாணவன் ஆன்லைனிலும், நேரிடையாகவும் பின்தொடர்ந்து மனரீதியாகத் துன்புறுத்தி வந்துள்ளான்.
पुणे के लोनी कालभोर इलाके में एक हैरान कर देने वाली वारदात सामने आई है. जहां एक पिता का सब्र तब टूट गया जब उन्होंने अपनी बेटी को पिछले 15 दिनों से प्रताड़ित करने वाले युवक को रंगे हाथों पकड़ लिया. पिता ने उस युवक की जमकर पिटाई कर दी. #Pune #ViralVideo
पूरी… pic.twitter.com/0gVgtWn6Bv
— NDTV India (@ndtvindia) March 5, 2026
மகளின் வேதனையைக் கேட்ட தந்தை, நேராகக் கல்லூரி வளாகத்திற்கே வந்து அந்த இளைஞனைப் பிடித்துள்ளார். முதலில் அவனுக்குப் புரிய வைக்க முயன்றபோது, அந்த இளைஞன் திமிராகப் பதிலளித்ததால் ஆத்திரமடைந்த தந்தை, அவனைத் தூக்கிப் போட்டு மிதித்தார். பொது இடத்திலேயே அந்த ரவுடி இளைஞனுக்குத் தந்தை கொடுத்த இந்த ‘தர்ம அடி’ வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. “பெண்களைத் தொந்தரவு செய்தால் இதுதான் கதி” என நெட்டிசன்கள் இந்தத் தந்தையின் செயலைப் பாராட்டி வருகின்றனர்.
