பாம்பு என்றாலே பயந்து நடுங்கும் பலருக்கு மத்தியில், ஒரு இளைஞன் எந்தவித பாதுகாப்பு கவசமும் இல்லாமல் ஒரு ராட்சத மலைப்பாம்புடன் மல்லுக்கட்டிய சம்பவம் இணையத்தையே அதிர வைத்துள்ளது. வைரலாகும் அந்த 53 வினாடி வீடியோவில், இளைஞன் ஒருவன் மலைப்பாம்பின் தலையைத் தன் காலால் மிதித்து அடக்க முயல்கிறான். கூட இருந்த நபர் பாம்பின் வாலைப் பிடித்து உதவ முயன்றபோது, எதிர்பாராத விதமாக பிடி நழுவ.. அவ்வளவுதான்! அந்த மலைப்பாம்பு மின்னல் வேகத்தில் இளைஞனின் காலைச் சுற்றிக்கொண்டு ‘மரண பிடி’ (Death Grip) போட்டுவிட்டது.
GAGAL JADI OAWANG ULAR😹 pic.twitter.com/Ct4N2P2zyi
— blaugranaline. (@blaugrana1O) March 4, 2026
உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு அந்த இளைஞன் தப்பிக்கப் போராடும் காட்சிகள் பார்ப்பவர் நெஞ்சைப் பதற வைக்கின்றன. எக்ஸ் (X) தளத்தில் சுமார் 20 லட்சத்திற்கும் அதிகமானோரால் பார்க்கப்பட்ட இந்த வீடியோ, “பாம்புடன் விளையாட்டு விபரீதத்தில் முடியும்” என்பதற்குப் பாடமாக அமைந்துள்ளது. மலைப்பாம்புக்கு விஷம் இல்லை என்றாலும், அது தன் உடல் வலிமையால் எலும்புகளை நொறுக்கி மூச்சுத்திணறச் செய்து உயிரைப் பறிக்கும் வல்லமை கொண்டது என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் நிரூபித்துள்ளது. அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினாலும், இந்த வீடியோ இப்போது செம ட்ரெண்டிங்!
