“இந்த குல்ஃபியைச் சாப்பிட்டால் நேரா ஹாஸ்பிடல் தான் போகணும்!” என நெட்டிசன்களைக் கொதித்தெழ வைத்துள்ளது வைரலாகும் ஒரு எக்ஸ் (X) பதிவு. மிகவும் அசுத்தமான, சுகாதாரமற்ற சூழலில் குல்ஃபி ஐஸ் தயாரிக்கப்படும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகிப் பார்ப்பவர்களைக் குமட்ட வைத்துள்ளது. கைகளால் அழுக்கான முறையில் கையாள்வது முதல், ஈக்கள் மொய்க்கும் இடங்கள் வரை அந்த வீடியோவில் பதிவாகியுள்ள காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
Eat this kulfi and you might end up straight in the hospital. The level of filth and unhygienic conditions in which it’s being made is absolutely disgusting. And agencies like Food Safety and Standards Authority of India seem completely missing in action. In India, food safety… pic.twitter.com/xwG8HGblKH
— The Nalanda Index (@Nalanda_index) March 5, 2026
இந்தியாவில் உணவுப் பாதுகாப்பு என்பது ஒரு வேடிக்கையான விஷயமாக மாறிவிட்டதா? எனப் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். குறிப்பாக, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) போன்ற அமைப்புகள் எங்கே போனது? மக்கள் உயிருடன் விளையாடும் இது போன்ற தயாரிப்புகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என அந்தப் பதிவில் ஆவேசமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ இப்போது இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
