அகமதாபாத்தில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் நியூசிலாந்துடன் மோத இந்திய அணி தயாராகிவிட்டது. ஆனால், தொடக்க வீரர் அபிஷேக் சர்மா தொடர்ந்து சொதப்பி வருவது ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. அவரை அணியிலிருந்து நீக்க வேண்டும் எனப் பேச்சுக்கள் எழுந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் ஒரு அதிரடி ஆலோசனையை வழங்கியுள்ளார். “அபிஷேக் சர்மாவை நீக்காதீர்கள், அவர் மீது நம்பிக்கை வையுங்கள்” என்று அணி நிர்வாகத்திற்கு அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

​”அபிஷேக் சர்மா ஒரு திறமையான வீரர், பெரிய வீரர்களுக்கு இது போன்ற கடினமான காலங்கள் வருவது சகஜம். சஞ்சு சாம்சன் அசத்துவது போல, அபிஷேக் சர்மாவும் ஃபைனலில் கம்பேக் கொடுப்பார்” என்று கபில் தேவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும், பும்ராவை உலகின் நம்பர் ஒன் பவுலர் என்று புகழ்ந்து தள்ளிய அவர், இங்கிலாந்துக்கு எதிரான பரபரப்பான வெற்றிக்குப் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார். 250 ரன்கள் எடுத்தும் கடைசி வரை போட்டி திக் திக் என நகர்ந்தது கிரிக்கெட்டுக்குக் கிடைத்த வெற்றி என்றும் அவர் நெகிழ்ந்துள்ளார்.