புனே அருகே லோஹகட்(Lohagad) கோட்டைப் பள்ளத்தாக்கில் விழுந்து தொழிலதிபர் மகன் கேதன் அகர்வால் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில், அவரது வருங்கால மனைவியே தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து அவரைக் கொலை செய்தது அம்பலமாகி ஒட்டுமொத்த மகாராஷ்டிராவிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேதன் அகர்வால் மற்றும் சியா கோயல் (Siya Goyal) ஆகிய இரு தரப்பும் பெரிய தொழிலதிபர்களின் குடும்பங்கள் என்பதால், பெற்றோரால் நிச்சயம் செய்யப்பட்டு வரும் நவம்பர் மாதம் ஜெய்ப்பூரில் இவர்களின் பிரம்மாண்ட அரச குடும்பத் திருமணம் நடக்கவிருந்தது.
ஆனால், கேதனைப் பிடிக்காத, தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து அவரைக் கொலை செய்யத் திட்டம் தீட்டி, லோஹகட் கோட்டைக்குச் சுற்றுலா சென்றபோது கேதனைப் பள்ளத்தாக்கில் தள்ளிவிட்டுக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.
இந்த விபரீதக் கொலைக்குப் பிறகு யாருக்கும் சந்தேகம் வராதபடி அழுது நாடகமாடிய சியா, கேதன் இறந்த 12 மணி நேரத்திற்குள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “கேதன், என் பிறந்தநாளான ஜூன் 19-க்கு முந்தைய நாளே என்னை ஏன் தனியாகத் தவிக்கவிட்டுச் சென்றாய், நம் திருமணம் இவ்வளவு அருகில் இருக்கும்போது ஏன் இந்த முடிவு, உன்னை நான் மிகவும் நேசித்தேன், உன் ஆன்மா சாந்தியடையட்டும்” என்று ஒரு நீண்ட சோகப் பதிவை எழுதி ஒட்டுமொத்த சோசியல் மீடியாவையும் நம்ப வைத்துள்ளார்.
ட்ரெக்கிங் சென்றபோது தவறி விழுந்து கேதன் இறந்துவிட்டார் என்று அனைவரும் பரிதாபப்பட்ட நிலையில், லோணாவला கிராமப்புற போலீசாரின் தீவிர விசாரணையில் ஒரு வாரத்திற்குப் பிறகு சியாவின் இந்த கள்ளக்காதல் கொடூர முகம் வெளிச்சத்திற்கு வந்து அவர் தற்பेாது கைதாகியுள்ள செய்தி இணையத்தை உலுக்கி, காட்டுத்தீयாய் வைரலாகி வருகிறது.
