உலகில் எந்தப் பிரதிபலனும் எதிர்பாராமல் தன் வாழ்நாள் முழுவதும் உழைக்கும் ஒரே ஜீவன் தந்தை மட்டுமே. வறுமையோ, இயற்கைச் சீற்றமோ எதுவரினும் தன் பிள்ளையின் எதிர்காலம் மட்டும் எந்தக் காரணத்தைக் கொண்டும் இருண்டுவிடக் கூடாது என்று போராடும் ஒரு பாசக்காரத் தந்தையின் நெகிழ்ச்சியூட்டும் உண்மைப் போராட்டமே தற்போதைய சமூக வலைதளங்களின் பேசுபொருளாக மாறியுள்ளது.

தினமும் காலையில் பொழுது விடிந்ததும் அந்தத் தந்தைக்கு ஒரு புதிய போர்க்களமே தொடங்கிவிடுகிறது. தனது பிள்ளையைப் பள்ளிக்கு அழைத்துச் செல்வதற்காக அவர் நாள்தோறும் ஒரு ஆக்ரோஷமான ஆற்றைக் கடக்க வேண்டியுள்ளது.

மழைக்காலத்துக் காட்டாற்று வெள்ளமோ, எலும்பை உலுக்கும் பனிக் குளிரோ அல்லது சுட்டெரிக்கும் வெயிலோ எந்தவொரு இயற்கைச் சூழலும் அவரது உறுதியைக் குலைக்கவில்லை. ஆபத்தான அந்த ஆற்றின் ஆழத்தையும், வேகத்தையும் பொருட்படுத்தாமல் தனது குழந்தையைத் தோள் மீது பத்திரமாகச் சுமந்து கொண்டு, அந்தத் தந்தை ஆற்றைக் கடக்கும் காட்சி பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது.

ஆற்றின் மறுகரையில் உள்ள பள்ளியில் தனது குழந்தையைப் பாதுகாப்பாகக் கொண்டு போய் சேர்த்த பிறகே, அவனது நெஞ்சில் நிம்மதிப் பெருமூச்சு பிறக்கிறது. இது வெறும் ஒரு ஆற்றைக் கடக்கும் அன்றாடப் பயணம் மட்டுமல்ல; வறுமையின் பிடியில் இருக்கும் ஒரு தந்தை, “கல்வி மட்டும்தான் தன் குழந்தையின் எதிர்காலத்தை மாற்றியமைக்கும் பேராயுதம்” என்று ஆழமாக நம்பும் தியாகத்தின் கதை.

“>

தன் புள்ளையின் வெற்றி தான் தனது சொந்தக் கனவு என்று வாழும் இந்தத் தந்தையின் இணையற்ற பாசப் போராட்டம், காண்போர் நெஞ்சைக் கரைய வைப்பதோடு தந்தைமையின் பெருமையை மீண்டும் உலகிற்கு உணர்த்தியுள்ளது.