வெளிநாடுகளில் வேலைக்குச் செல்வது என்பது வெறும் இடமாற்றம் மட்டுமல்ல, அது ஒரு முற்றிலும் மாறுபட்ட பணி கலாச்சாரத்திற்குள் நுழைவது போன்றது. குறிப்பாக, நெதர்லாந்தில் வசிக்கும் பிரீத்தி என்ற இந்தியப் பெண், அங்குள்ள பணி சூழல் குறித்தும், இந்திய பணி கலாச்சாரத்துடன் அதற்கு இருக்கும் பிரம்மாண்டமான வித்தியாசங்கள் குறித்தும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள தகவல்கள் இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.

அங்கு வேலை செய்யும் சூழலில் அவர் கவனித்த 10 முக்கிய அம்சங்களை அவர் பட்டியலிட்டுள்ளார். அதில் முதன்மையானதாக அவர் குறிப்பிடுவது, நெதர்லாந்தில் ‘வேலை-வாழ்க்கை சமநிலை’என்பது வெறும் சொல்லளவில் இல்லாமல், உண்மையாகவே மதிக்கப்படுகிறது. “எனது வேலை நேரம் முடிந்ததும், அந்த நாள் முடிந்துவிடுகிறது. பணி நேரம் முடிந்த பிறகு அலுவலகத் தொடர்பில் இருக்க வேண்டும் என்ற எந்த எதிர்பார்ப்பும் அங்கு இல்லை,” என்று அவர் நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்.

அதேபோல், குடும்பத்திற்கு முதலிடம் அளிப்பது அங்கு இயல்பான ஒன்றாக இருக்கிறது. குழந்தைகளின் தேவைகளுக்காகப் பெற்றோர்கள் வேலைக்கு நடுவே சென்று வருவதையோ அல்லது பெற்றோர் விடுப்பு எடுப்பதையோ யாரும் தவறாகவோ, குறைவாகவோ பார்ப்பதில்லை. நீண்ட நேரம் அலுவலகத்தில் அமர்ந்திருப்பதைக் காட்டிலும், வேலையைத் திறமையாக முடிப்பதற்கே அங்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Preeti | corporate Mom | Life with 3 kids in Netherlands🇳🇱 (@desidutchie)

“>

இதனுடன், கூட்டங்கள் சரியாகத் தொடங்குவது, முடிப்பது, ஊழியர்கள் மீது மேலாளர்கள் வைத்திருக்கும் அதீத நம்பிக்கை, மனநலத்திற்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் மற்றும் நெகிழ்வான வேலை நேரம் எனப் பல விஷயங்களை அவர் வியந்து கூறியுள்ளார். இந்த வீடியோவைப் பார்த்த பல இந்தியப் பணியாளர்கள், தங்களின் அனுபவங்களையும், வெளிநாட்டில் வேலை தேடுவது குறித்த சந்தேகங்களையும் கமெண்ட் பகுதியில் பகிர்ந்து வருகின்றனர்.