ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தனக்கு வழங்கிய பாதுகாப்பை திரும்ப பெற்றதால் தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தெரிவித்துள்ளார். அதாவது கிரானைட் குவாரி முறைகேடு வழக்கில் சாட்சியமாக இருக்கும் சகாயம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வில்லை. இது பற்றி அவரிடம் கேட்டபோது தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறினார்.

அதோடு தனக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை மீண்டும் வழங்க வேண்டும் எனவும் அப்படி வழங்கினால் மட்டும்தான் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சி சொல்வேன் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் எனக்கு வழங்கிய பாதுகாப்பை திரும்ப பெற்றது தன்னுடைய உயிருக்கு மிகவும் ஆபத்தானது என்றும் கூறியுள்ளார்.