உங்கள் ஆதார் எண் உங்கள் அனுமதியின்றி வேறு யாராலாவது பயன்படுத்தப்படுகிறதா என்பதை ‘myAadhaar’ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் நீங்கள் வீட்டிலிருந்தே கண்டுபிடிக்கலாம். இந்தத் தளத்தில் உங்கள் ஆதார் எண்ணைப் பயன்படுத்தி உள்ளே சென்றதும் (Login), ‘Authentication History’ என்ற பகுதி இருக்கும். அங்கு சென்றால், கடந்த ஆறு மாதங்களில் உங்கள் ஆதார் எங்கெல்லாம் பயன்படுத்தப்பட்டது, பயோமெட்ரிக் (கைரேகை) மூலமா அல்லது ஓடிபி (OTP) மூலமா உங்கள் விவரங்கள் சரிபார்க்கப்பட்டதா போன்ற முழு வரலாற்றையும் நீங்கள் பார்க்க முடியும்.

​ஒருவேளை உங்கள் அனுமதியில்லாமல் ஏதேனும் ஒரு இடத்தில் உங்கள் ஆதார் பயன்படுத்தப்பட்டிருப்பதை நீங்கள் கவனித்தால், உடனடியாக உஷாராக வேண்டும். இது போன்ற முறைகேடுகள் குறித்து புகார் அளிக்க 1947 என்ற கட்டணமில்லா உதவி எண்ணைத் தொடர்புகொள்ளலாம். உங்கள் ஆதார் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க, உங்கள் பயோமெட்ரிக் விவரங்களை (Biometrics) லாக் (Lock) செய்யும் வசதியும் இதே இணையதளத்தில் உள்ளது என்பது கூடுதல் தகவல்.