மும்பையின் எம்.எம்.ஆர்.டி.ஏ மைதானத்தில் மார்ச் 28, 2026 அன்று நடைபெற்ற யோ யோ ஹனி சிங்கின் இசை நிகழ்ச்சி பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆனால், அங்கு முறையான டிக்கெட் இருந்தும் உள்ளே நுழைய அனுமதிக்கப்படாத ரூஹி என்ற பெண், கேட் ஏறி குதித்த வீடியோ இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது குறித்து இன்ஸ்டாகிராமில் விளக்கமளித்த ரூஹி, தான் ஒரு படபடப்பு மற்றும் மூடிய இடங்களைக் கண்டு அஞ்சும் நோயாளி என்றும், சுமார் 50 நிமிடங்கள் கூட்ட நெரிசலில் சிக்கியதால் ஏற்பட்ட பதற்றத்தில் உணர்ச்சிவசப்பட்டு அவ்வாறு செய்ததாகவும் கூறி அதிகாரிகளிடம் மன்னிப்பு கோரினார். தான் அவ்வாறுசெய்த பிறகு தான் மற்றவர்களுக்காக கேட் திறக்கப்பட்டதாகவும் அவர் அதில் குறிப்பிட்டார்.
<a href=”http://
View this post on Instagram
“>
இருப்பினும், அந்த வீடியோவை தனது அனுமதியின்றி இணையத்தில் பதிவேற்றியது மற்றும் அதில் தனது அந்தரங்கம் தற்செயலாக வெளிப்பட்டும் கூட அதை நீக்க சைபர் கிரைம் மற்றும் இன்ஸ்டாகிராம் நடவடிக்கை எடுக்காதது குறித்து அவர் வேதனை தெரிவித்துள்ளார். பாடகர் ஹனி சிங் தன்னை ‘ஷெர்னி’ (சிங்கம்) என்று அழைத்து ஆதரவு அளித்தாலும், சமூக வலைதளங்களில் வரும் வெறுப்பு கமெண்ட்டுகள் தன்னை மனதளவில் பாதித்துள்ளதாக ரூஹி கூறியுள்ளார்.
ஒரு நபரின் அனுமதியின்றி அவர்களின் வீடியோவை பகிர்ந்துஉரிமைகளை மீறுவது தவறு என்றும், இது போன்ற உள்ளடக்கங்களை உடனடியாக நீக்க சமூக ஊடக தளங்கள் கடுமையான விதிகளைக் கொண்டு வர வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். ஒருவரின் சம்மதம் என்பது நேரில் மட்டுமல்ல, இணையத்திலும் மிக முக்கியம் என்பதை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது.
