நடிகை வனிதா விஜயகுமார் சமீபத்தில் தனது சமூக வலைதளத்தில் லைவாக ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தபோது, தனது குடும்பத்தினர், இசைஞானி இளையராஜா தொடர்ந்த வழக்கு குறித்து பேசும் போது கண்ணீர் வடித்தார். இந்த உருக்கமான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
புதிய முயற்சியாக ‘மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர்’ என்ற திரைப்படத்தை தனது மகள் தயாரித்து இயக்கியிருந்தார். இதில் கதாநாயகியாக நடித்ததோடு, கதையை எழுதியும் இயக்கியும் இருந்தார் வனிதா. இப்படத்தில் இடம்பெற்ற ‘ராத்திரி சிவராத்திரி’ என்ற பழைய பாடலை பயன்படுத்தியதற்காக இசைஞானி இளையராஜா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இது குறித்து ஏற்கனவே, “இந்த பாடலின் உரிமையை வாங்கிவைத்துள்ளேன்” என வனிதா விளக்கம் அளித்திருந்தார். மேலும், இளையராஜாவை சந்தித்து ஆசிர்வாதம் வாங்கிய புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், தனது திரைப்படம் ஓடிடி தளங்களில் வெளியிட முடியாத சூழ்நிலையில், தனது யூடியூப் சேனல் மூலமாகவே ரசிகர்கள் கட்டணம் செலுத்தி படத்தை காணலாம் என லைவில் தெரிவித்தார். தன்னிடம் ஏற்கனவே கடன்கள் உள்ளன என்றும், ரசிகர்கள் யூடியூப் உறுப்பினர்களாக இணைந்தால் தங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
மேலும் தன்னுடைய சொந்த குடும்பத்தினரே துரோகம் செய்தது மிகுந்த வேதனையுடன் பேசினார். சில ஆண்டுகளுக்கு முன்பு எனது குடும்பத்தினர் என்னை தெருவில் வைத்து அடித்து துன்புறுத்திய போது கேட்க யாரும் இல்லை. இப்போது எனக்காக பலர் குரல் கொடுப்பது சந்தோஷமாக உள்ளது. பணம் எல்லாவற்றையும் மாற்றி விட்டது. குடும்பத்தினரே சொத்துக்காக பிரித்து பார்க்கும்போது மற்றவர்கள் எப்படி விட்டுக் கொடுப்பார்கள் என்றும் வனிதா கூறியுள்ளார்.
பணம் மற்றும் சொத்துகள் தான் உறவுகளை இழுத்து வைக்கும் என்பதை எடுத்துரைத்த வனிதா, “பெரிய படங்களுக்கு பிரச்சனை வந்தாலும் சமாளிக்க முடியும். ஆனால் என்னை போல் சிங்கிள் மதராக வாழும் ஒருவர் இந்த நிலைக்கு வருவது வேதனையாக உள்ளது” என அழுதபடியே உருக்கமாக பகிர்ந்தார். வனிதாவின் இந்த உருக்கம் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்று வருகிறது.
