நடப்பு டாடா ஐபிஎல் 2026 தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிக்காக விளையாடி வரும் அதிரடி ஆட்டக்காரர் வெங்கடேஷ் ஐயர், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான வாழ்வா சாவா போட்டியில் வெறித்தனமாக விளையாடி அதிரடி அரைசதம் கடந்து அசத்தினார். காயம் காரணமாக கேப்டன் ரஜத் படிதார் விலகிய இக்கட்டான சூழ்நிலையில் களம் இறங்கிய வெங்கடேஷ் ஐயர், பயமே இல்லாமல் பஞ்சாப் பவுலர்களின் பந்துகளை நாலாபுறமும் சிதறடித்து ஆர்சிபி அணியை மிரட்டலான நிலைக்குக் கொண்டு சென்றார்.
BREAKING: RCB cricketer Venkatesh Iyer recreated Thalapathy Vijay’s iconic MERSAL pose after smashing a brilliant fifty against Punjab. #PBKSvsRCB pic.twitter.com/0m6DOLVrak
— Actor Vijay Team (@ActorVijayTeam) May 17, 2026
இந்நிலையில், தனது அபாரமான அரைசதத்தை பூர்த்தி செய்தவுடன், ஒட்டுமொத்த மைதானமும் அதிரும் வகையில் தமிழக முதலமைச்சரும், நடிகருமான ‘தளபதி’ விஜய்யின் ஐகானிக் திரைப்படமான ‘மெர்சல்’ படத்தில் வரும் மாஸ் போஸை அப்படியே ரீ-கிரியேட் செய்து மைதானத்தின் நடுவே கொண்டாடினார். கிரிக்கெட் மைதானத்தில் அரங்கேறிய இந்தத் திடீர் ‘தளபதி’ மேனியா, ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களையும் கிரிக்கெட் ரசிகர்களையும் பெரும் குஷியில் ஆழ்த்தியுள்ளதுடன், இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி ட்ரெண்டாகி வருகிறது.
