தமிழ் சினிமா வட்டாரத்தில் எப்போதுமே பரபரப்பாகப் பேசப்படும் விவகாரங்களில் ஒன்று, நடிகர் விஜய் மற்றும் நடிகை திரிஷா ஆகியோரின் நட்பு மற்றும் அரசியல் ரீதியான நகர்வுகள் தான். இந்நிலையில், நடிகை மாளவிகா கலந்து கொண்ட சமீபத்திய பேட்டி ஒன்றில், பத்திரிகையாளர் ஒருவர் கேட்ட அநாகரீகமான கேள்வி ஒட்டுமொத்த மீடியா உலகிலும், சமூக வலைத்தளங்களிலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ​அந்தப் பேட்டியின் போது நிருபர் ஒருவர், “நடிகை திரிஷா அவர்கள் விஜய் செல்லும் இடங்களுக்கெல்லாம் சென்று கொண்டிருக்கிறாரே, அதேபோல நீங்கள் விஜய் கூட டிராவல் பண்ணுவதற்கான ஐடியா எதுவும் இருக்கிறதா?” என்று மாளவிகாவிடம் நேரடியாகக் கேள்வி எழுப்பினார்.

இந்த எதிர்பாராத மற்றும் தர்மசங்கடமான கேள்வியைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மாளவிகா, “இதெல்லாம் என்ன கேள்வி? என்ன கேட்கிறீர்கள் நீங்கள்?” என்று மேடையிலேயே ஓப்பனாக முகம் சுளித்து தனது கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். மாளவிகா ஷாக் ஆன இந்த வீடியோ தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.