சமூக வலைத்தளங்களில் இன்றைய காலகட்டத்தில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரல் ஆகி வருகிறது. அதிலும் குறிப்பாக செல்லப் பிராணிகள் மற்றும் விலங்குகளின் வீடியோக்களுக்கு பஞ்சமே இல்லை. இதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளமே உள்ள நிலையில் தினம் தோறும் ஏதாவது ஒரு வேடிக்கையான வீடியோ வைரலாகி வருகிறது. அதன்படி தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் குரங்கு ஒன்று அசால்டாக கேமராவை கையாளுகிறது.

இதனை பார்க்கும்போது கட்டாயம் அனைவருக்கும் வியப்பாகத்தான் இருக்கும். இரண்டு புகைப்பட கலைஞர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டு இருக்கும் நிலையில் ஒரு புகைப்படக்காரர் குரங்குக்கு கேமராவில் இருக்கும் புகைப்படத்தை காட்டுகின்றார். பின்னர் குரங்கு தானே கேமராவை கையாண்டு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்க்கிறது. இந்த வீடியோ தற்போது வைரலாகி பலரையும் வியக்க வைத்துள்ளது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

JC Pieri இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@jcpieri)