சமூக வலைத்தளங்களில் இன்றைய காலகட்டத்தில் தினந்தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரல் ஆகி வருகிறது. அதிலும் குறிப்பாக விலங்குகள் மற்றும் செல்ல பிராணிகள் குறித்த வீடியோக்களுக்கு பஞ்சமே இருக்காது. அதனை ரசிப்பதற்கு இணையத்தில் தனி ஒரு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் செல்ல பூனை ஒன்று அதனை வளர்ப்பவரிடம் ஒரு தந்திரத்தை விரைவாக புரிந்து கொள்கிறது.

ஒரு பூனையின் உரிமையாளர் அதற்கு நாணயத்தை வைத்து ஒரு தந்திரத்தை கற்றுக் கொடுக்கிறார். அந்த பூனை அவர் சொல்லிக் காட்டுவதை மிகவும் பொறுமையாக பார்க்கின்றது. அவரை கவனிக்கும் பூனையைப் பார்த்தால் நம் இதயமே அதனை கண்டு மகிழ்ச்சியாகி விடும். குறிப்பிட்ட பூனை அந்த தந்திரத்தை குறை இல்லாமல் செய்தவுடன் ஒரு வேடிக்கையான ஆச்சரியத்துடன் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.