இந்தியத் தலைநகர் டெல்லியில் நிலவும் மோசமான காற்று மாசு (Air Pollution) நிலைமை, நாட்டின் உயர்மட்ட பிரமுகர்களின் பயணங்களையும் பாதித்துள்ளது. இது தொடர்பான காணொளி ஒன்று தற்போது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ​மிகுந்த காற்று மாசின் காரணமாக ஏற்பட்ட அடர்ந்த பனி மூட்டம் (Smog) மற்றும் குறைந்த பார்வைத் திறன் (Low Visibility) காரணமாக, நேற்று (திங்கட்கிழமை) சில முக்கியமான விமானங்களின் புறப்பாடு தாமதமானது.

பிரதமர் மற்றும் உலகப் புகழ்பெற்ற விளையாட்டு வீரர் என முக்கியப் பிரமுகர்களின் விமானப் பயணமே மாசு காரணமாகத் தாமதமானது, டெல்லியின் காற்று மாசு எந்த அளவுக்குப் பயங்கரமான நிலையை அடைந்துள்ளது என்பதைக் காட்டுவதாகப் பலரும் சமூக வலைதளங்களில் கவலையும், விவாதமும் எழுப்பி வருகின்றனர்.