ஐபிஎல் சீசன் 15 வது தொடர்பானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் மும்பை அணி கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று தங்களுடைய முதல் வெற்றியை பதிவு செய்தது. மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை அணியானது இரண்டு போட்டிகளில் தோல்வியும் ஒரு போட்டியில் வெற்றியும் பெற்று புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா இந்த சீசனில் இம்பேக்ட் பிளேயராக களமிறங்கி விளையாடுகிறார்.

இந்த நிலையில் ரோஹித் சர்மா என்னுடைய பதவி மாறி இருக்கலாம். ஆனால் அணிக்காக சிறந்ததை செய்ய விரும்புகிறேன் என்பது மாறவில்லை என்று கூறியுள்ளார். என்னுடைய ரோல் மாறிவிட்டன. நிறைய மாறிவிட்டன. ஆனால் என்னுடைய மனநிலை அப்படியேதான் உள்ளது. எந்த அணிக்காக நான் என்ன செய்ய விரும்புகிறேன் என்பது மாறவில்லை . அதுதான் வெளியே சென்று ஆட்டங்களையும் கோப்பைகளையும் வெல்வது” என்று கூறியுள்ளார்.