சமூக வலைதளங்களில் பரவி வரும் ஒரு வீடியோ காண்பவர் அனைவரையும் நிலைகுலைய வைத்துள்ளது. நள்ளிரவு நேரத்தில் ஆள் அரவமற்ற சாலையில், ஒரு இளைஞன் தனது வயதான தந்தையை வாகனத்தில் இருந்து கீழே தள்ளி, காலால் உதைக்கும் காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளன. அதன்பின்னர் அந்த இளைஞன் தனது தந்தையை அங்கேயே விட்டுவிட்டு வாகனத்தில் ஏறிச் சென்றுவிட, அந்த முதியவர் “என்னை இங்கே விட்டுவிட்டுப் போகாதே” எனக் கைகூப்பி அழுதுகொண்டே கெஞ்சும் காட்சி பார்ப்பவர் நெஞ்சை ரணமாக்குகிறது.
एक पिता-पुत्र कार में देश की हालत पर चर्चा कर रहे थे
पिता ने 2014 के बाद हालात बिगड़ने की बात कही
बेटा असहमत हुआ — बहस बढ़ी — गुस्सा इतना कि उसने अपने ही पिता को चलती कार से बाहर धक्का दे दिया।अंधभक्ति ने नए भारत में कई परिवारों को तोड़ दिया है। pic.twitter.com/q3023a3Dki
— Deepak Khatri (@Deepakkhatri812) February 25, 2026
தந்தைக்கும் மகனுக்கும் இடையே ஏற்பட்ட அரசியல் கருத்து வேறுபாடே இந்த மோதலுக்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. சாலையில் சென்ற பிற வாகனங்கள் இதைப் பார்த்தும் நில்லாமல் சென்றது வேதனையின் உச்சம். மனமுடைந்து போன அந்த முதியவர் சாலையோரம் அமர்ந்து கதறி அழுதது மனிதாபிமானத்தின் வீழ்ச்சியையே காட்டுகிறது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், அந்த இளைஞனைக் கண்டுபிடித்துக் கடும் தண்டனை வழங்க வேண்டும் என்றும், முதியவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் ஆவேசமாகக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
