இன்றைய அவசர உலகில் மற்றவர்களின் துயரத்தைக் கவனிக்கக்கூட நேரமில்லாமல் அனைவரும் ஓடிக்கொண்டிருக்கிறோம். ஆனால், சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு வீடியோ, மனிதாபிமானம் என்பது வயது சம்பந்தப்பட்டது அல்ல, அது மனது சம்பந்தப்பட்டது என்பதை நிரூபித்துள்ளது. தாகத்தால் வாடிக்கொண்டிருந்த ஒரு முதியவருக்கு, ஒரு சிறுமி ஓடிச் சென்று தண்ணீர் பாட்டில் கொடுத்த அந்த நொடி, பார்ப்பவர் அனைவரின் கண்களையும் குளமாக்கியுள்ளது. ‘socialjantaa’ என்ற பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ, அன்புக்கு மொழி தேவையில்லை என்பதை அழகாகச் சித்தரிக்கிறது.
இந்தச் சிறுமியின் செயல், பெரியவர்களாகிய நாம் சமூகத்திற்கு என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. ஒரு சிறிய புன்னகை, ஒரு கிளாஸ் தண்ணீர் அல்லது யாருக்காவது கதவைத் திறந்து விடுவது போன்ற சின்னஞ்சிறிய உதவிகள்கூட ஒருவரின் நாளை அழகாக்க முடியும் என்பதை இந்தச் சிறுமி உணர்த்தியுள்ளார். எந்தவித எதிர்பார்ப்புமின்றி செய்யப்படும் உதவிதான் உண்மையான மகிழ்ச்சியைத் தரும் என்பதற்கு இந்த வீடியோவே சாட்சி. இந்த உலகம் இன்னும் அழகாக இருப்பதற்குக் காரணம் இத்தகைய சிறுமிகளும், அவர்களின் ஈரமான மனமும்தான்.
