ராய்ப்பூரில் நேற்று (ஜன. 23) நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில், இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இஷான் கிஷன் வெறும் 32 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 76 ரன்கள் விளாசி இந்திய அணியின் வெற்றியை எளிதாக்கினார்.
முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 208 ரன்கள் குவித்த நிலையில், கடினமான இலக்கை நோக்கி ஆடிய இந்தியா 6 ரன்களுக்கே 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்தச் சமயத்தில் களமிறங்கிய இஷான் கிஷன், கேப்டன் சூர்யகுமார் யாதவுடன் இணைந்து கிவீஸ் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார்.
Ishan Kishan’s comeback arc is unreal.
What an innings he played last night.#INDvNZ pic.twitter.com/w7cSc9B1CP
— Anya (@AnyaUnsaid) January 24, 2026
“>
போட்டிக்குப் பிறகு பேசிய இஷான், “என்னால் மீண்டும் ரன்களைக் குவிக்க முடியுமா என்று எனக்குள்ளேயே நான் கேள்வி கேட்டுக்கொண்டேன்; அதற்குப் பதிலளிக்கும் விதமாக இந்த இன்னிங்ஸ் அமைந்தது மகிழ்ச்சியளிக்கிறது” என்று உருக்கமாகத் தெரிவித்தார்.
இஷான் கிஷனின் இந்த அதிரடி மற்றும் சூர்யகுமார் யாதவின் ஆட்டமிழக்காத 82 ரன்கள் உதவியுடன், இந்திய அணி வெறும் 15.2 ஓவர்களில் 209 ரன்களை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
