தெலுங்கானா மாநிலம் யூசுஃப்குடாவில் உள்ள பிக்பாஸ்கெட் நிறுவனம், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டெலிவரி செய்யும் ஊழியர்கள் அனைவரும் சாண்டா கிளாஸ் தொப்பி அணிய வேண்டும் என்று அதிரடி உத்தரவு போட்டது. ஆனால், அங்கு வேலை செய்யும் டெலிவரி பாய் ஒருவர், “என்னால் மதம் சார்ந்த அடையாளங்களை அணிய முடியாது” என்று சொல்லி இதற்குப் பலமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
ஒரு சாதாரணமான டெலிவரி வேலையில் இப்படி ஒரு கட்டாயத்தை நிர்வாகம் கொண்டு வந்தது அந்த ஊழியருக்குப் பிடிக்கவில்லை. இந்த விஷயம் வெளியே தெரிந்ததும், பஜ்ரங் தள் அமைப்பினர் அந்த ஸ்டோர் நிர்வாகத்திடம் நேராகச் சென்று வார்னிங் கொடுத்தனர்.
BigBasket instructed its delivery staff to wear Santa Claus caps while delivering products in Yousufguda, Telangana.
One of the delivery boys objected to this.
Afterward, Bajrang Dal warned the store management to stop forcing religious symbols on employees. pic.twitter.com/vmdBf19LH8
— Team Hindu United (@TeamHinduUnited) December 23, 2025
“ஊழியர்களை அவர்களின் விருப்பத்திற்கு மாறாக மதம் சார்ந்த சின்னங்களை அணியச் சொல்லி கட்டாயப்படுத்தக் கூடாது” என்று அவர்கள் எச்சரித்துள்ளனர். பண்டிகைக் காலங்களில் நிறுவனங்கள் செய்யும் இதுபோன்ற ‘மார்க்கெட்டிங்’ ஐடியாக்கள், சில நேரங்களில் எப்படிப் பெரிய சர்ச்சையாக மாறுகிறது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு உதாரணமாக அமைந்துள்ளது.
