இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகியுள்ள ஒரு காணொளி, பார்ப்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியதோடு “இப்படியெல்லாம் கூட யோசிப்பார்களா?” என்று வியக்க வைத்துள்ளது. அந்த வீடியோவில், ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் சாலையில் சென்று கொண்டிருக்கிறார். அப்போது அங்கிருக்கும் தெரு நாய்கள் அவரைத் துரத்தத் தொடங்குகின்றன. பொதுவாக நாய்கள் துரத்தினால் வேகமெடுக்கும் மற்றவர்களைப் போலல்லாமல், இவர் மிகவும் வித்தியாசமாகச் சிந்தித்துள்ளார்.
நாய்களிடமிருந்து தப்பிக்க, அவர் தனது வாகனத்திலேயே ஒரு கருப்பு நிற வளர்ப்பு நாயை அழைத்து வந்துள்ளார். சாலையில் தெரு நாய்கள் அவரைத் துரத்த முற்படும்போது, வண்டியில் அமர்ந்திருக்கும் அந்தப் பாதுகாப்பு நாய் உடனடியாகப் பாய்ந்து சென்று அந்த நாய்களைத் துரத்தித் தாக்குகிறது. வினோதமான முறையில் கையாளப்பட்ட இந்தத் தற்காப்பு நுட்பம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
