வாஷிங்டன் ஹில்டன் ஹோட்டலில் நடந்த வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் இரவு விருந்தில் அரங்கேறிய துப்பாக்கிச் சூடு சம்பவம், தற்போது ஒரு ‘திருட்டு’ புகாரால் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டவுடன் மண்டபத்தில் இருந்தவர்கள் அலறியடித்து ஓடிய நிலையில், அங்கிருந்த சில பத்திரிகையாளர்கள் மற்றும் விருந்தினர்கள் செய்த காரியம் சமூக வலைதளங்களில் கடும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிருக்கு ஆபத்தான சூழலில் கூட, சிலர் சிரித்துக்கொண்டும் செல்ஃபி எடுத்துக்கொண்டும் இருந்தது ஒருபுறமிருக்க, விலை உயர்ந்த ஒயின் பாட்டில்களைத் திருடிச் சென்ற காட்சிகள் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, கருப்பு நிறக் கோட் அணிந்த பெண் ஒருவர் மேஜையில் இருந்த இரண்டு ஒயின் பாட்டில்களை லாவகமாக எடுத்துச் செல்லும் காட்சி, அமெரிக்க ஊடகத்துறையினரின் பொறுப்பற்ற நடத்தையை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

“>

மறுபுறம், இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய அதிபர் டிரம்ப், துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டபோது ஏதோ தட்டு கீழே விழுந்து உடைந்ததாகவே முதலில் நினைத்ததாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அருகில் இருந்த மெலானியா டிரம்ப் அது “மோசமான சத்தம்” என எச்சரித்த பிறகே அபாயத்தை உணர்ந்ததாகத் தெரிவித்துள்ளார்.

“தாக்குதல் நடத்தியவர் மண்டபத்திற்குள் நுழையவே இல்லை, பாதுகாப்புப் படையினர் அவரைத் தடுத்து நிறுத்திவிட்டனர்” என டிரம்ப் பாராட்டுத் தெரிவித்தாலும், உயிருக்கு அஞ்ச வேண்டிய நேரத்தில் ஒயின் பாட்டில்களை அள்ளிக்கொண்டு ஓடிய விருந்தினர்களின் செயல் “பத்திரிகை தர்மத்திற்கே இழுக்கு” என இணையவாசிகள் வறுத்தெடுத்து வருகின்றனர்.