கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்கான விசாரணையை உச்சநீதிமன்றம் மூலம் சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்ற TVK கோரியதைத் தொடர்ந்து, தமிழ்நாடு காவல்துறை மீது நம்பிக்கை இல்லை என கூறிய விவகாரம் குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இதுகுறித்து யூடூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த திருமாவளவன், “அதிமுக, பாஜக, தமிழக வெற்றிக்கழகம் என மூன்று கட்சிகளும் சிபிஐ விசாரணை கேட்கின்றன. இது அரசியல் நோக்கத்திற்காக முன்வைக்கப்படும் கோரிக்கையாகவே பார்க்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
மேலும், “சிபிஐ என்கிற நிறுவனம் 100 சதவீத நம்பகத்தன்மையுடையது என கூறுவது தவறு. இன்று அது ஆளுங்கட்சியின் கருவியாகவே மாறியுள்ளது. வழக்குகள் சிபிஐக்குக் கொடுக்கப்பட்டாலும் நீதி கிடைக்கும் என உறுதி இல்லை, தாமதமே அதிகம்” என கூறியுள்ளார்.
இதற்கு நெறியாளர் ,வேங்கை வயல் விவகாரத்தில் தமிழக காவல்துறை மீது நம்பிக்கை போய்விட்டது, எனவே சிபிஐ விசாரணை வேண்டும் என ஏன் கேட்டீர்கள் என திருமாவளவனிடம் கேட்க. அதற்கு தடுமாறிய திருமாவளவன் அதற்கான சூழல் ஏற்பட்டது. மக்கள் என்னிடம் கூறினார்கள் — காவல்துறை எங்களை மிரட்டுகிறது, ஒத்துக்கொள்ளச் சொல்கிறது, குற்றவாளிகளாக காட்டுகிறது.
பார்க்க சாந்தமா இருக்காங்கன்னு பேட்டி கொடுக்க வந்திட்டாரு, என்னா ஒரு அடி… ஒரே அடியில் ஆடு திருடரு மாட்டிக்கிட்டாரு..😜😜
Wait பண்ணி அடிக்கிறதுல Gold Medal வாங்கியிருப்பாங்க போல இந்த Anchor… 🤣🤣 pic.twitter.com/9s7p0KJXlF
— K.Jayaprakash (@itskJayaprakash) October 11, 2025
“>
நான் மக்களின் குரலைத்தான் கேட்க முடியும்; ஆளுங்கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கிறேன் என்பதற்காக காவல்துறை மீது நம்பிக்கை வையுங்கள் என்று சொல்ல முடியாது” எனத் திருமாவளவன் கூறியுள்ளார். இதனை பல நெட்டிசன்கள் விமர்சித்து, “இது அரசியல் நியாயத்தை மீறும் கருத்து” என சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
