தமிழ் சினிமாவின் இமயம் இயக்குனர் பாரதிராஜா 84 வயதில் நேற்று காலமானார். தன்னுடைய மகன் மனோஜ் மரணத்திற்கு பிறகு உடல் நலக்குறைவினால் அவதிப்பட்டு வந்த பாரதிராஜா சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவருடைய மரணத்திற்கு பல்வேறு திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்த நிலையில் இன்று அவருடைய உடல் சொந்த ஊரான தேனி மாவட்டத்திற்கு கொண்டுவரப்பட்டது.
இன்று காலை முதல் அவரது உடலுக்கு உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் என பலரும் அஞ்சலி தெரிவித்த நிலையில் தற்போது அவருடைய உடல் தேவதானப்பட்டி அருகே அவரது தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக இயக்குனர் பாரதிராஜாவுக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்குகள் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் தற்போது அதன்படியே 72 குண்டுகள் முழங்க அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. மேலும் இந்த இறுதி நிகழ்வில் அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
#WATCH | விடைபெற்றார் இயக்குநர் இமயம் பாரதிராஜா#bharathirajafuneral #Bharathiraja #News18TamilNadu pic.twitter.com/S4XqhF6yH3
— News18 Tamil Nadu (@News18TamilNadu) June 11, 2026
