இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரல் ஆகி வருகிறது. அதிலும் குறிப்பாக பாம்புகள் குறித்த வீடியோக்கள் அதிகளவு பகிரப்பட்டு வருவதால் இதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. பொதுவாகவே பாம்புகள் விஷத்தன்மை அதிகம் கொண்டிருப்பதால் மனிதர்கள் அருகில் செல்வதற்கு பயப்படுவார்கள். ஆனால் பாம்புகளும் மனிதர்களைப் போல அறிவாக செயல்படும் என்றாலும் சில நேரத்தில் கோபத்தை வெளிக்காட்டும். கொடிய விஷம் உடைய பாம்புகள் கூட மனிதர்கள் வசிக்கும் இடத்திற்கு தற்போது வந்து இடையூறு அளிப்பது மட்டுமல்லாமல் சமையலறை மற்றும் வாகனம் என பல இடங்களில் பதுங்கி இருந்து அச்சுறுத்துகிறது.

இந்த நிலையில் தங்க நிறத்திலான பாம்பு வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தங்க நிறத்திலான ஆறடி நீளம் கொண்ட பாம்பு ஒன்று சாலையை கடந்து செல்லும் காட்சியை பார்த்து அதிர்ச்சி அடைந்த மக்கள் அதனை வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளனர்.