சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும், சிலர் யோசிக்காமல் ஆபத்தான செயலில் ஈடுபடுவது தொடர்கிறது. தற்போது, அந்த வகையில் ஒரு அதிர்ச்சி தரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்ட இந்த வீடியோ, ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை வெகுவாக ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோவில், ஒரு இ-ரிக்ஷா ஓட்டுநர், வழக்கமான முறையில் வாகனம் ஓட்டாமல், படுக்கும் நிலையில் சாய்ந்து, ஓட்டுகிறார்.

இது மட்டும் அல்லாமல், ஹெல்மெட், சீட் பெல்ட் எதுவும் இல்லாமல் மிக அதிக வேகத்தில் ரிக்‌ஷாவை ஓட்டுகிறார். இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் “சாதாரணமா இந்தக் காமெடியா பாக்க முடியாது… சுத்தமாக ஹீரோ ஸ்டைல்!” என ரசிக்கின்றனர்.

ஆனால், பெரும்பாலானோர், “தான் மட்டும் இல்ல… மற்றவர்களின் உயிரையும் ஆபத்தில் ஆழ்த்துறாரு” என கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஒரு பயனர், “இவரைப் பிடிச்சு அபராதம் விதிக்கணும்… உரிமம் கீல் பண்ணணும்” என்று கோரியுள்ளார். மற்றொருவர், “வீடியோ வைரலாகுது, ஆனா இவர் பின்னாடி ஏதாவது நடந்தா யார்தான் பொறுப்பா இருப்பாங்க?” என கேள்வி எழுப்பியுள்ளார்.