தலைமை நீதிபதியான பி.ஆர். கவாய், தொற்று காரணமாக டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது மருத்துவ சிகிச்சை பெறுகின்ற நிலையில், மருத்துவமனையிலுள்ள டாக்டர்கள் அவரின் உடல்நிலை சீராக உள்ளது என்றும், சிகிச்சைக்கு நன்றாக பதிலளித்து வருகிறார் என்றும் பிடிஐ செய்தி நிறுவனம் திங்களன்று தகவல் தெரிவித்துள்ளது. எனினும், எந்த வகையான தொற்று எனும் விவரங்கள் வெளியாகவில்லை.

இதையடுத்து, “தலைமை நீதிபதி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஓரிரு நாட்களில் பணிக்கு திரும்புவார்” எனவும்,  அவர் திங்கட்கிழமையன்று நீதிமன்றத்தில் நேரில் வரவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 12ம் தேதி, நல்சார் சட்ட பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற அவர், “பாபாசாகேப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் – அரசியலமைப்பு சபை – இந்திய அரசியலமைப்பு” எனும் தலைப்பில் சிறப்பு அஞ்சல் அட்டை மற்றும் கலை/கையெழுத்து அடங்கிய அட்டைகளின் தொகுப்பை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.