புதுச்சேரி பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் எத்தனை கட்சி மாறி இருக்கிறார் என எண்ணிப் பார்த்தபோது எனக்கு தலையே சுற்றி விட்டது என முதலமைச்சர் ஸ்டாலின் கலாய்த்துள்ளார். திமுக – மதிமுக – தமாக – புதுவை மாநில காங்கிரஸ் – பின்னர் மீண்டும் தமாக – காங்கிரஸ் – பாஜக என்று பல கட்சிகள் அவர் தாவி இருக்கிறார். இன்னும் 2 மாதம் கழித்து வந்து பார்த்தால் அவர் எந்த கட்சியில் இருப்பாரோ? , யாமறியேன் பராபரமே. அது நமச்சிவாயத்திற்கே தெரியாது என்று முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.