பாலிவுட் திரை உலகின் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் தற்போது தென்னிந்திய மொழிகளில் நடித்து வருகின்றார். பாலிவுட்டை தொடர்ந்து சமீபத்தில் தமிழில் ஓ மை கோர்ஸ் என்ற திரைப்படத்திலும் இவர் நடித்திருந்தார். அதனைப் போலவே சாம்பியன் என்ற கன்னட திரைப்படத்திலும் இவர் நடித்து வருகிறார். இன்றளவும் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கும் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.

இந்நிலையில் நடிகை சன்னி லியோன் தான் அடல்ட் ஸ்டாராக இருந்தபோது பல அவமானங்களை சந்தித்ததாக தெரிவித்துள்ளார். இது குறித்த பேட்டியில், இந்தி பிக் பாஸ் என் வாழ்க்கையை மாற்றி விட்டது. இந்தியாவுக்கு வந்தால் கொன்று விடுவோம் என பல மிரட்டல்கள் வந்தது. அனைத்து மிரட்டல்களையும் மீறித்தான் இந்தியா வந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்றேன். தற்போது அடல்ட் படங்களை நிறுத்தி நல்ல கதையை தேர்வு செய்து நடித்து வருகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.