கடையில் இருந்த ஐஸ் பெட்டி (Freezer) ஒன்றின் மூலம் மின்சாரம் பாய்ந்து இளைஞர் ஒருவர் அதிர்ச்சியடைந்த காட்சி தற்போது எக்ஸ் (X) தளத்தில் வைரலாகி வருகிறது. ஆனால், ஷாக் அடித்ததை உணர்ந்த அந்த இளைஞர், அதைத் திருத்த முயற்சிப்பதற்குப் பதிலாக, அருகில் இருந்த தனது நண்பனை அழைத்து “இந்தா இதத் தொட்டுப் பாரு” என்று சொல்ல, நண்பனும் தெரியாமல் அதைத் தொட, அவருக்கும் அதே போல் மின்சாரம் பாய்ந்து துடித்தார்.
இருவருக்கும் மின்சாரம் அடித்த அந்தத் தருணம் பார்ப்போரைச் சிரிக்க வைத்தாலும், இது எவ்வளவு பெரிய ஆபத்து என்பதை எண்ணிப் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். நண்பர்களுக்குள் இருக்கும் இந்தத் துடுக்குத்தனமான செயல் இணையவாசிகளைப் பதைபதைக்க வைத்துள்ளது.
When you get a shock and need to make sure you aren't crazy, so you test it on your best friend. Mission accomplished😂😭 pic.twitter.com/d95See9B81
— Ghar Ke Kalesh (@gharkekalesh) March 21, 2026
“நல்ல நண்பனா இருந்தா ஷாக் அடிக்கும் போது தடுத்துருப்பான், ஆனா இவன் என்னடான்னா நண்பனையும் சேர்த்து ஷாக் அடிக்க வச்சுருக்கான்!” என நெட்டிசன்கள் கிண்டலாகவும், எச்சரிக்கையாகவும் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். விளையாட்டாகச் செய்யப்படும் இதுபோன்ற செயல்கள் உயிருக்கே ஆபத்தாக முடியும் என்பதை இந்த வீடியோ உணர்த்துகிறது.
