சமூக வலைதளங்களில் ‘புகழ்’ தேடும் மோகம் இன்று எந்த அளவுக்கு மோசமாக மாறியுள்ளது என்பதற்கு இந்த வீடியோவே சாட்சி. பிச்சை எடுப்பவர்களுக்குப் பிஸ்கட் பாக்கெட் ஒன்றைக் கொடுத்துவிட்டு, அதை ஏதோ பெரிய சாதனை செய்தது போல வீடியோ எடுத்து பதிவிட்ட பெண்ணின் செயலுக்கு இணையத்தில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
ஏழைகளின் பசியைப் போக்குவது மனிதாபிமானமான செயல், ஆனால் அதைத் தனது விளம்பரத்திற்காகப் பயன்படுத்தி, அவர்கள் தட்டில் தட்டை வைப்பது போல வீடியோ எடுப்பது நாகரிகமற்ற செயல் எனப் பலரும் சாடி வருகின்றனர்.
”தானம் செய்வதை விடத் தர்மம் ரகசியமாக இருக்க வேண்டும், அதை ஏன் இப்படி வீடியோ எடுத்து உலகிற்குத் தெரிவிக்க வேண்டும்?” என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். உண்மையில் உதவுபவர்கள் விளம்பரம் தேடுவதில்லை, ஆனால் இது போன்ற செயல்கள் ஏழைகளின் சுயமரியாதையைச் சீண்டுவதோடு, மனிதாபிமானத்தையே வியாபாரமாக்கி விடுகிறது.
"Woman giving biscuits to beggars." 😡
A lady gave biscuits to beggars and filmed it as if she had done something big.
Why does a large number of beggars exist
in every city? The govt is directly responsible for it. Begging should not be glorified. pic.twitter.com/MHHB5lRq4U— Suraj Kumar Bauddh (@SurajKrBauddh) March 22, 2026
இத்தகைய ‘வீடியோ தானங்களுக்கு’ எதிராக மக்கள் தங்கள் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்து வருவது தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாகியுள்ளது.
