தெலங்காணா மாநிலம், ரங்காரெட்டி மாவட்டம், அப்துல்லாபூர் மெட் பகுதியில் ஒரு அதிர்ச்சியளிக்கும் சம்பவம் நடந்தது. ஒரு இளைஞர், தனக்கு திருமணம் செய்ய வேண்டும் என்று கோரி, உயர் மின்னழுத்த கோபுரத்தின் மீது ஏறி, அங்கிருந்து கீழே குதித்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தெலங்காணா காவல்துறையினர், அந்த இளைஞரை கோபுரத்திலிருந்து பாதுகாப்பாக இறக்க முயன்றனர்.
హైటెన్షన్ టవర్ పై నుంచి దూకిన వ్యక్తి
క్రేన్ సహాయంతో వ్యక్తిని కిందకు దించడానికి ప్రయత్నిస్తుండగా కిందకు దూకేసిన వ్యక్తి
వ్యక్తికి తీవ్ర గాయాలు.. 108 సహాయంతో స్థానిక ఆసుపత్రికి తరలింపు https://t.co/Jpcszmbyxk pic.twitter.com/SxMjY0aK3c
— ChotaNews App (@ChotaNewsApp) October 27, 2025
மின்சாரத் துறை ஊழியர்கள் கிரேன் உதவியுடன் அவரை கீழே இறக்க முயற்சித்தபோது, அவர் திடீரென குதித்துவிட்டார். மின்சார ஊழியர் ஒருவர் அவரைப் பிடிக்க முயன்றபோது, அவரிடமிருந்து தப்பித்து சேற்றில் விழுந்தார். இதனால் அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தற்போது அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
