நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தேர்தல் பிரசாரத்தில் மீண்டும் தனது பாணியில் அதிரடி கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். “மீண்டும் மீண்டும் உதய சூரியனுக்கும், இரட்டை இலைக்கும் வாக்களித்தால் எந்த சாமியும் உங்களை மன்னிக்காது” என்று வாக்காளர்களைப் பார்த்து ஆவேசமாகப் பேசியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், “நான் உங்களிடம் இருந்து உங்களுக்காகவே வந்த ஒரு புரட்சியாளன். இந்தச் சமூகத்தை மாற்றி அமைக்கவே வந்துள்ளேன். நாம் வெற்றி அடையும் வரை எதற்கும் அஞ்சாமல் தொடர்ந்து போராடுவோம்; ஓய மாட்டோம்” என்று தனது தொண்டர்களிடையே எழுச்சியூட்டினார். சீமானின் இந்த அதிரடி விமர்சனம் தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
