சென்னையில் படிக்கட்டில் இருந்து பேருந்தில் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து பள்ளி மாணவன் இரண்டு கால்களையும் இழந்த நிலையில் அவருடைய குடும்பத்தினரை நடிகர் ரஞ்சனா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பாஜக பிரமுகரும், நடிகையுமான ரஞ்சனா நாச்சியார் படிக்கட்டில் தொங்கிக்கொண்டு பயணித்த மாணவர்களை இரண்டு வாரங்களுக்கு முன்பாக தான் அடித்த நிலையில் தற்போது இந்த விபத்து அரங்கேறி உள்ளது. சென்னை குன்றத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளி படித்து வரும் பேருந்தில் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு வந்துள்ளார். இதனையடுத்து தவறி விழுந்த அவரின் இரண்டு கால்களும் துண்டாகியது.

இதனை அடுத்து அவர் ஸ்டாண்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் . இதனை அடுத்து மாணவன் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனைக்கு ரஞ்சனா நாச்சியார் நேரில் வந்து அவருடைய பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார். பின் செய்தியாளர்களை சந்தித்து பேசியவர் இந்த சம்பவத்தை கேட்டதும் ஒரு தாயாக துடிதுடித்து இங்கு வந்தேன். எதற்காக அன்று அந்த மாணவர்களை நான் அடித்தேன் என்று இப்போது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். நான் அப்படி செய்த பிறகு அரசு இந்த விஷயத்தில் விழித்துக் கொண்டு ஏதாவது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

ஆனால் இல்லை .இன்று மாணவனுக்கு கால்களை போய்விட்டது. இனி அவன் வாழ்நாள் முழுவதும் அவனுடைய அன்றாட விஷயங்களை கூட யாருடைய உதவியாகத்தான் எதிர்பார்க்க வேண்டும். பாவம் அந்தப் பையன் மனது எப்படி பாடுபடும். அந்த மாணவனை பார்த்து அவன் அம்மா எப்படி தினம் தினம் துடிச்சு போவாங்க. இப்பொழுது நான் இங்கே வந்திருப்பதற்கும்ஏதேதோ சாயம் பூசுவார்கள் அதை பற்றி எனக்கு கவலை இல்லை என்று கூறியுள்ளார்.