தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கட்சியின் சின்னமான ‘விசிலை’ மையமாக வைத்து அதிரடியான தேர்தல் பிரச்சாரப் பாடலைத் தளபதி விஜய் வெளியிட்டுள்ளார். புகழ்பெற்ற இசையமைப்பாளர் தமன் இசையமைக்க, கவிஞர் விவேக் வரிகளில் உருவான இந்தப் பாடல், தற்போது சமூக வலைதளங்களில் விஜய் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஏற்கனவே கொடி பாடல், கொள்கை பாடல் மற்றும் ‘உங்கள் விஜய் நா வரேன்’ எனத் தொடர்ந்து அதிரடி ஹிட்களைக் கொடுத்து வரும் தவெக, தற்போது இந்த விசில் பாடலின் மூலம் தேர்தல் பரப்புரையை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளது. ​தனித்துவமான இசை மற்றும் ஈர்க்கும் வரிகளால் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பாடல், தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரச்சாரத்திற்குப் பெரும் பலமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

ஏற்கனவே வெளிவந்த பாடல்கள் மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், இந்த விசில் பிரச்சாரப் பாடல் விஜய் அரசியல் பயணத்தில் புதியதொரு மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. வரும் சட்டமன்றத் தேர்தலில் ஒவ்வொரு வீட்டிலும் இந்த விசில் சத்தம் எதிரொலிக்கும் வகையில் தவெக தரப்பு காய் நகர்த்தி வருவது, அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.