கரூர் துயரச் சம்பவத்திற்குப் பிறகு தமிழக வெற்றிக்கழகத்தின் முக்கிய நிர்வாகியான ஆதார் அர்ஜுனா எந்தவிதமான கருத்தும் வெளியிடாமல் இருந்தது குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அவர், “இது மிகவும் கனமான நேரம். பதினாறாவது நாள் காரியம் முடியும் வரை எங்கள் தரப்பிலிருந்து யாரும் பேச முடியாது” எனக் கூறியிருந்தார். இந்த பதில், தமிழக வெற்றிக்கழக ஆதரவாளர்களிடையே ஒரு மரியாதையான நிலைப்பாட்டாக பார்க்கப்பட்டாலும், சமூக வலைதளங்களில் இதை விமர்சிக்கும் குரல்களும் எழுந்துள்ளன.

அதனைத் தொடர்ந்து, பிரபல யூட்யூப் சேனல் U2 Brutus தனது சமூக வலைதளத்தில், “இந்த அமைதி காரியம் முடியும் வரை அல்ல… கூட்டணி பேச்சுவார்த்தை முடியும் வரை!” என குறிப்பிட்டு, “அதிமுக – பாஜக உடனான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது; விரைவில் எடப்பாடிக்கான நட்சத்திர பேச்சாளராக விஜய் களம் இறங்குவார்.

“>

 

Wait and see மக்களே… அன்னைக்கு தெரியும் இந்த U2 Brutus சொன்னது உண்மைனு” என பதிவு செய்துள்ளது இணையத்தில் வைரலாகி, விஜய் அரசியல் பாதை மற்றும் சாத்தியமான கூட்டணிகள் குறித்து பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.