கரூர் தொகுதி எம்பி ஜோதிமணி. இவர் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி ஆவார். இவர் சமீபத்தில் காங்கிரஸில் நடக்கும் உட்கட்சி பூசல் தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நிர்வாகிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக மேலிடம் கூறியது. அதே நேரத்தில் கட்சிக்குள் நடக்கும் பிரச்சினைகளை பொது வெளியில் கூற வேண்டாம் எனவும் செல்வப் பெருந்தகை உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் அறிவுறுத்தி இருந்தனர்.
“எங்க தொகுதிக்கு என்ன செஞ்சீங்க..” எம்பி ஜோதிமணியை பார்த்து கேட்ட நபரை காங்கிரஸ் நிர்வாகி தாக்கிய பரபரப்பு காட்சி
#mpjothimani #mp #congress pic.twitter.com/RttQ3SC76g— Thanthi TV (@ThanthiTV) January 7, 2026
இந்த நிலையில் எம்பி ஜோதி மணியை பார்த்து ஒருவர் எங்க தொகுதிக்கு நீங்க என்ன செஞ்சீங்க என்று கேட்டார். அவர் காரில் இருந்து இறங்கியவுடன் அவ்வாறு கேட்டதால் கோபம் அடைந்த நிர்வாகி ஒருவர் உடனடியாக அந்த நபரை தாக்கி அங்கிருந்து விரட்டினார். அந்த சமயத்தில் எம்பி ஜோதிமணி அவரை தடுக்காமல் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
