ஈரோடு மாவட்டத்திலுள்ள கந்தசாமியூர் வடக்கு தயிர் பாளையம் பகுதியில் வேலுச்சாமி (53)-தீபா (40) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் விவசாயிகளாக இருக்கும் நிலையில் அந்த பகுதியில் ஒரு விசைத்தறி பட்டறையும் வைத்து நடத்தி வந்தனர். இவர்களுக்கு 22 வயதில் பிரதீப் என்ற மகன் இருந்த நிலையில் இவர் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் தங்கி பி.டெக் படித்து வந்தார்.
இவர் கடந்த ஏப்ரல் மாதம் 16ஆம் தேதி ஊருக்கு வந்த நிலையில் தந்தையின் விசைத்தறி பட்டறையில் மழையால் சிமெண்ட் கூரை ஒழுகுவதை கவனித்து அதை சரி செய்வதற்காக மேலே ஏறினார். அப்போது எதிர்பாராத விதமாக வாலிபர் தவறி விழுந்ததில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்ட உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் நேற்று காலை தீபா தன்னுடைய உறவினர்களுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினார். அதில் எங்களால் பிரதீப் தங்கத்தை பிரிந்து வாழ முடியவில்லை எனவே நாங்களும் அவர் இருக்கும் இருக்கும் இடத்திற்கே எங்கள் தங்கத்தை தேடி போகிறோம் என்று வாய்ஸ் மெசேஜ் whatsapp-இல் அனுப்பிவிட்டு வேலுச்சாமி மற்றும் தீபா இருவரும் விஷம் குடித்துவிட்டனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் வீட்டிற்கு வந்தபோது தீபா மற்றும் வேலுச்சாமி இருவரும் பிணமாக கிடந்ததை கண்டு வேதனை அடைந்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
