சென்னை மாவட்டம் ஆவடி பகுதியைச் சேர்ந்த 47 வயது தொழிலதிபர் கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் இருக்கும் ஹோட்டலுக்கு சென்று பாரில் மது குடித்தார். அவருடன் ஒரு இளம் பெண்ணும் மது குடித்துள்ளார். இருவரும் அதே ஹோட்டலில் அறை எடுத்து இரவு முழுவதும் உல்லாசமாக இருந்தனர்.

மறுநாள் காலை தொழிலதிபர் கண்காணித்து பார்த்தபோது அவரது கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தங்க நகை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அவருடன் மது குடித்த இளம்பெண் தங்க சங்கிலியை திருடிக் கொண்டு ஹோட்டலில் இருந்து தப்பி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து தொழிலதிபர் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் நகையுடன் தப்பி சென்ற இளம்பெண்ணை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.